10 ஆண்டுகளுக்கு பிறகு ராம்கோபால் வர்மாவுடன் இணையும் பிரபல நடிகை

பாலிவுட்டில் முன்னணி கூட்டணியாக வலம் வந்த கூட்டணி 10 ஆண்டுகளுக்கு மீண்டும் இணைந்து பணியாற்றியுள்ளது.
10 ஆண்டுகளுக்கு பிறகு ராம்கோபால் வர்மாவுடன் இணையும் பிரபல நடிகை
Published on

பாலிவுட்டின் முன்னணி இயக்குனரான ராம்கோபால் வர்மா தற்போது புதிய தொடரை தயாரித்துள்ளார். முன்னணி கூட்டணியான ராம்கோபால் வர்மா மற்றும் இஷா கோபிகர் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் இத்தொடரில் இணைந்துள்ளனர். எம்எக்ஸ் அசல் தொடரான தகனம் தொடரில் இக்கூட்டணி இணைந்துள்ளது. இதில் இஷா கோபிகர், நைனா கங்குலி, அபிஷேக் துஹான், அபிலாஷ் சவுத்ரி, சாயாஜி ஷிண்டே, அஷ்வத்காந்த் சர்மா, பார்வதி அருண் மற்றும் பிரதீப் ராவத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த தொடரை ராம்கோபால் வர்மா தயாரிக்க அகஸ்தியா மஞ்சு இயக்கியுள்ளார். கிரைம் திரில்லராக உருவாகியுள்ள தகனம் தொடர், தன் தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கும் ஒரு மகன். பழிவாங்குதல், இரத்தக்களரி மற்றும் ஒடுக்குமுறைக்கான எதிர்ப்பு ஆகியவற்றின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தொடர் குறித்து தயாரிப்பாளர் ராம்கோபால் வர்மா பேசுகையில், எனது முதல் ஓடிடி தொடரான தகனம் தொடரை எம்எக்ஸ் உடன் இணைந்து அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். மகாத்மா காந்தி சொன்ன கண்ணுக்குக் கண் உலகையே குருடாக்குவதில்தான் வெற்றியடையும், மகாபாரதத்தில் மேற்கோள் காட்டப்பட்ட பழிவாங்குதல் என்பது தூய்மையான உணர்ச்சி என்ற இரு முரண்பாடான மேற்கோள்களுக்கு இடையில் உணர்வுப்பூர்வமான சம்பவங்களுடன் உருவாகியுள்ளது தான் இந்த கதை. தகனம் வெறும் பழிவாங்கும் கதையல்ல, பழிவாங்கும் உணர்வின் கதையைச் சொல்கிறது. இது ஒரு க்ரைம் த்ரில்லர் அல்ல, ஆனால் இது உங்களை உறைய வைக்கும், உணர்வுப்பூர்வமாக சிலிர்க்க வைக்கும், குற்றங்களைப் பற்றியது என்றார். இத்தொடர் இன்று (14 ஏப்ரல்) நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com