மேடையில் விசிலடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.
மேடையில் விசிலடித்து ரசிகர்களை கவர்ந்த பிரபல நடிகை
Published on

தமிழில் முதன்முறையாக தெலுங்கு ஹீரோ ராம் பொத்தினேனி நடிக்கும் தி வாரியர் திரைப்படத்தில் சிலம்பரசன், ஹரிபிரியா பாடிய புல்லட் முதல் சிங்கிள் பாடலை சென்னையில் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் படத்தின் நடிகையான கீர்த்தி ஷெட்டியும் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இயக்குனர் லிங்குசாமிக்கும், திரைப்படத்தை சேர்ந்தவர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார். தமிழ் ரசிகர்கள் தனக்கு மிகுந்த ஆதரவினை அளிப்பதாக கூறி நன்றி தெரிவித்தார். அப்போது படத்தில் நடிகை விசில் அடிக்கும் காட்சிகள் இருப்பதை அறிந்த தொகுப்பாளர், ரசிகர்களுக்காக விசிலடிக்குமாறு கோரினார். இதையடுத்து இயக்குனரின் அனுமதியை பெற்ற கீர்த்தி ஷெட்டி, மேடையிலேயே விசிலடித்து அசத்தினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com