பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்

தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர் ராகேஷ் மாஸ்டர்.
பிரபல நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் மரணம்.. திரையுலகினர் இரங்கல்
Published on

ஆந்திர மாநிலம், ஐதராபாத்தை சேர்ந்தவர் பிரபல திரைப்பட நடன இயக்குனர் ராகேஷ் மாஸ்டர் (வயது 53). திருப்பதியில் பிறந்த இவரது இயற்பெயர் ராமா ராவ். திரைப்பட நடன இயக்குனரான பிறகு இவரது இயற்பெயரை ராகேஷ் என மாற்றிக் கொண்டார். கடந்த வாரம் படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டினம் மற்றும் பீமாவரம் சென்று இருந்தார். அங்கு அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ராகேஷ் நேற்று மாலை உடல் உறுப்புகள் செயலிழந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உடலுக்கு தெலுங்கு திரையுலகினர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ராகேஷ் மாஸ்டர் தெலுங்கில் பிரபல நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜுனா, மகேஷ் பாபு, ராம்பாபு, பிரபாஸ் உள்ளிட்ட நடிகர்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றினார். மேலும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட 1500 திரைப்படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றி உள்ளார். இவரது மறைவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com