ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு மொழி படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வரும் ராஷ்மிகாவின் செயலால் ரசிகர்கள் வருத்தம் அடைந்திருக்கிறார்கள்.
ராஷ்மிகாவின் செயலால் வருத்தமடைந்த ரசிகர்கள்
Published on

தமிழில் சுல்தான் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. தெலுங்கு, கன்னட மொழிகளிலும் அதிக படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியான புஷ்பா படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் கவனம் பெற்றார்.

அதேநேரம் ராஷ்மிகாவுக்கு அழகு இருக்கிறது. ஆனால் நல்ல மனது இல்லை என்று ரசிகர்கள் எரிந்து விழும் அளவுக்கு சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். இதற்கு காரணம் உள்ளது. சமீபத்தில் ராஷ்மிகா மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருந்து வெளியே வந்தார். அப்போது ஒரு சிறுமி அவரிடம் எதாவது கொடுங்கள் என்று கேட்கிறாள். அந்த சிறுமியை ராஷ்மிகாவின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டனர்.

ஆனாலும் அந்த குழந்தை ராஷ்மிகாவை நோக்கி கையை நீட்டி பசிக்கிறது சாப்பிட வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். ஆனால் ராஷ்மிகா அந்த குழந்தைக்கு எதுவும் கொடுக்காமல் சிரித்துக்கொண்டே சென்று காரில் உட்கார்ந்து விட்டார். இந்த வீடியோ வலைத்தளத்தில் வைரலாகி பலரும் ராஷ்மிகாவின் செயலை சாடி வருகின்றனர். மேலும் பல ரசிகர்கள் அந்த குழந்தைக்கு எதாவது கொடுத்திருக்கிலாம் என்றும் பதிவு செய்து வருத்தமடைந்திருக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com