விவசாயி விஷம் குடித்து தற்கொலை

திசையன்விளை அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி விஷம் குடித்து தற்கொலை
Published on

திசையன்விளை:

திசையன்விளை அருகே உள்ள பெருங்குளம் கோயில்தெருவை சேர்ந்தவர் தில்லை நடராஜன் (வயது 46), விவசாயி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவி சுபாஷினியிடம் தகராறு செய்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு அவர் மதுபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் அவரிடம் மனைவி பேசாமல் இருந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த தில்லை நடராஜன் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை உறவினர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திசையன்விளை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த தில்லை நடராஜனுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com