விவசாயி சாவு

பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி பலியானார்.
விவசாயி சாவு
Published on

ஆத்தூர்:-

தலைவாசல் அருகே உள்ள பெரியேரி பகுதியை சேர்ந்தவர் மணி (வயது 49). விவசாயி. நாகப்பட்டினம் மாவட்டம் கங்களாஞ்சேரி புதுநகரை சேர்ந்தவர் சத்தியநாதன் (47). 2 பேரும் நண்பர்கள். இவர்கள் நேற்று ஆத்தூர் வந்துவிட்டு பெரியேரிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தனர். ஆத்தூர் அருகே அம்மம்பாளையம் ஊராட்சி காந்திபுரம் பகுதியில் தனியார் பஸ்சின் பின்புறம் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் மணி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த சத்தியநாதன் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com