

சிக்பள்ளாப்பூர்:
சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா கடம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி. இவருக்கு சொந்தமான நிலம் அப்பகுதியில் உள்ளது. அதில் நாராயணசாமி விவசாயம் செய்து வருகிறார். இந்தநிலையில், நேற்றுமுன்தினம் அவர் சொந்த வேலை காரணமாக சிந்தாமணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் நாராயணசாமி மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட நாராயணசாமி படுகாயம் அடைந்தார். அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கந்தஹள்ளி போலீசார் சரக்கு வாகன டிரைவர் பாபா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.