கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்

திட்டக்குடி அருகே கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூட்டுறவு வங்கி முன்பு விவசாயிகள் காத்திருப்பு போராட்டம்
Published on

திட்டக்குடி,

திட்டக்குடி அருகே சிறுமங்கலம் கிராமத்தில் உள்ள வேளாண் கூட்டுறவு வங்கியின் முன்பு தென்னிந்திய நதிகள் விவசாயிகள் சங்கத்தின் வேப்பூர் வட்ட செயலாளர் ராஜா தலைமையில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கும் கடனை 15 மாதங்கள் கழித்து வசூல் செய்யாமல், கடன் கொடுத்த 6-வது மாதத்திலிருந்து கட்ட சொல்லிஅழுத்தம் கொடுப்பதை கண்டித்தும், நகை கடன் தள்ளுபடியில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அதனை கண்டித்தும் இந்த காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இது குறித்த தகவலின் பேரில் ஆவினங்குடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். தொடர்ந்து கடலூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிடுவதாக கூறி அவர்கள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com