சுத்திகரிப்பு நிலையம் அமைக்காததை கண்டித்து உண்ணாவிரதம்: எம்.எல்.ஏ. உள்பட 75 பேர் கைது

பெருந்துறை சிப்காட்டில் சுத்திகரிப்பு நிலையம் அமைக்காததை கண்டித்து சிப்காட் நிர்வாக திட்ட அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் அனுமதியின்றி ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுத்திகரிப்பு நிலையம் அமைக்காததை கண்டித்து உண்ணாவிரதம்: எம்.எல்.ஏ. உள்பட 75 பேர் கைது
Published on

ஈரோடு மாவட்டம், பெருந்துறை சிப்காட்டில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சுத்திகரிக்க ரூ.136 கோடியில் புது சுத்திகரிப்பு நிலைய திட்டத்தின் கீழ் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதாக தமிழக அரசு உறுதியளித்திருந்தது.

ஆனால் 4 ஆண்டுகளாகியும் இந்த திட்டம் இன்று வரை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று காலை சிப்காட் நிர்வாக திட்ட அலுவலகம் முன்பு அப்பகுதி மக்கள் ஒன்று திரண்டனர்.

இந்த போராட்டத்தில் அ.தி.மு.க.வை சேர்ந்த ஜெயக்குமார் எம்.எல்.ஏ.வும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்து பேசினார்.

அப்போது அங்கிருந்த போலீசார் அனுமதியின்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாக ஜெயக்குமார் எம்.எல்.ஏ. உள்ளிட்ட 75 பேரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com