குடும்ப தகராறில் தந்தை கொலை; மகன் கைது

குடும்ப தகராறில் தந்தையை கொன்ற மகன் கைது செய்யப்பட்டார்.
குடும்ப தகராறில் தந்தை கொலை; மகன் கைது
Published on

வேப்பந்தட்டை:

தந்தை- மகன்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பூலாம்பாடியை சேர்ந்தவர் வரதராஜ்(வயது 60). விவசாயி. இவருக்கு திருமணமாகி ஜோதி(55) என்ற மனைவியும், சாந்தி(37) என்ற மகளும், ராஜா(35) என்ற மகனும் உள்ளனர். சாந்திக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். ராஜாவிற்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இவர் நெல் அறுவடை எந்திர டிரைவராக உள்ளார். வரதராஜும், ராஜாவும் ஒரே வீட்டில் தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வந்தனர். மேலும் இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

கொலை

இந்நிலையில் நேற்று மாலை அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ராஜா தாக்கியதில் வரதராஜின் தலையில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது பற்றி தகவல் அறிந்த அரும்பாவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வரதராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com