பெண் பிணம்

மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரே 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கண்டெடுக்கப்பட்டது, ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெண் பிணம்
Published on

புதுச்சேரி

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் தாவரவியல் பூங்கா எதிரே 50 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீசார் பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. அவரது இடது கையில் சக்திவேல் என்று பச்சை குத்தப்பட்டுள்ளது. அவர் பச்சை நிற சேலை அணிந்திருந்தார். இது குறித்து ஒதியஞ்சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com