தேன்கனிக்கோட்டை அருகே கணவன் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கீழே விழுந்தபோது கணவன் கண் எதிரே சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.
தேன்கனிக்கோட்டை அருகே கணவன் கண் எதிரே பஸ் சக்கரத்தில் சிக்கி பெண் சாவு
Published on

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி கீழே விழுந்தபோது கணவன் கண் எதிரே சக்கரத்தில் சிக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

பஸ் மோதியது

தேன்கனிக்கோட்டை அருகே மேல்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 38). கணவன்-மனைவி 2 பேரும் மேல்பாளையம் அருகே உள்ள மணியம்பாடி என்ற கிராமத்தில் ஓட்டல் கடை நடத்தி வந்தனர். நேற்று அதிகாலை கணவன்-மனைவி 2 பேரும் மோட்டார் சைக்கிளில் மணியம்பாடிக்கு சென்றனர். அப்போது அந்த வழியாக எதிரே வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த சித்ரா பஸ் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். சிவக்குமார் காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணை

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று சித்ராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவன் கண் எதிரே மனைவி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com