பட்டதாரி பெண் தற்கொலை

நிச்சயதார்த்த தேதி தாமதமானதால் பட்டதாரி பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பட்டதாரி பெண் தற்கொலை
Published on

காரைக்கால்

காரைக்காலை அடுத்த நிரவி நாகத்தோப்பு தெருவைச் சேர்ந்தவர் கந்தவேல். கட்டிட தொழிலாளி. மனைவி உஷா. இவர்களது மகள் உமாமகேஸ்வரி (வயது 21). இவர் காரைக்கால் அவ்வையார் அரசு மகளிர் கல்லூரியில், பி.ஏ. படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். உமா மகேஸ்வரிக்கும், திருவாரூரில் உள்ள உறவினர் கலியபெருமாள் மகன் சதீஷ் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்துள்ளது. இதையறிந்த பெண்ணின் தந்தை கந்தவேல், உறவினரிடம் திருமணம் குறித்து பேசியபோது, சதீசுக்கு மூத்தவர்கள் 2 பேர் இருப்பதால் முதலில் திருமணம் செய்துவைக்க யோசித்தனர். நிச்சயதார்த்த தேதி குறித்து மாப்பிள்ளை வீட்டார் தாமதப்படுத்தி வந்த வேதனையில் இருந்த உமா மகேஸ்வரி, நேற்று முன்தினம் வீட்டு பூஜை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து நிரவி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com