ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை

ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை செய்து கொண்டார்.
ஆரல்வாய்மொழியில் பெண் தற்கொலை
Published on

ஆரல்வாய்மொழி,

ஆரல்வாய்மொழி ஆரோக்கிய நகரை சேர்ந்தவர் முத்தையா, தொழிலாளி. இவருடைய மனைவி மிக்கேல் அம்மாள் (வயது 48) மாற்று திறனாளியான இவர் சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.

அதற்காக ஆஸ்பத்திரியில் மாத்திரைகள் வாங்கி வைத்து இருந்தார். இந்த நிலையில் நேற்று சுகாதார பெண் பணியாளர்கள் மிக்கேல் அம்மாள் வீட்டுக்கு வந்தனர். அப்போது அங்கு மிக்கேல் அம்மாள் மயங்கிய நிலையில் இருந்தார். இதுகுறித்து அதே தெருவில் வசிக்கும் முத்தையாவின் தங்கையிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மிக்கேல் அம்மாளை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மிக்கேல் அம்மாள் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஆரல்வாய்மொழி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போது, அவர் உடல்நலம் சரியில்லாமல் இருந்த போது வாங்கி வைத்து இருந்த அனைத்து மாத்திரைகளையும் தின்று மிக்கேல் அம்மாள் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com