பெண் தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக, தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
பெண் தற்கொலை
Published on

கடமலைக்குண்டு:

வருசநாடு அருகே உள்ள காமராஜபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெமினி. அவருடைய மனைவி ராதிகா (வயது 34). இந்த தம்பதிக்கு ஜெயப்பிரியா என்ற மகளும், ஜெயபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். ஜெமினிக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதுதொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஜெமினி மீது ராதிகா புகார் அளித்தார். அதன்பேரில் 2 பேரையும் அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். மேலும் மனைவியிடம் தகராறு செய்யக்கூடாது என்று ஜெமினியை எச்சரித்து போலீசார் அனுப்பி வைத்தனர்.

இருப்பினும், ஜெமினி மதுப்பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து ராதிகாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் வெறுத்த ராதிகா நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருசநாடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் ராதிகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com