தூக்குப்போட்டு பெண் தற்கொலை

குடும்ப பிரச்சினை காரணமாக தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு பெண் தற்கொலை
Published on

குளித்தலை,

குளித்தலை அருகே உள்ள ரெத்தினம்பிள்ளை புதூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் மனைவி ராஜசுதா (வயது 26). குடும்ப பிரச்சினை காரணமாக இவர் குளித்தலை அருகே கண்டியூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றார். இந்தநிலையில் அவர் நேற்று முன்தினம் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ராஜசுதா ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com