பெண் தற்கொலை

வளவனூர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்டா.
பெண் தற்கொலை
Published on

வளவனூர்,

வளவனூர் அருகே சுந்தரி பாளையம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெயலட்சுமி (வயது 80). இவரது முதல் மகன் பன்னீர்செல்வம் (57). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்தில் இறந்துவிட்டார்.

மகன் இறந்த வேதனையில் இருந்த, ஜெயலட்சுமி, விஷத்தை ( எலி பேஸ்ட்) எடுத்து சாப்பிட்டார். இதையடுத்து சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.

இதுகுறித்து வளவனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com