கொட்டாரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தீக்குளித்து பெண் தற்கொலை

கொட்டாரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
கொட்டாரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தீக்குளித்து பெண் தற்கொலை
Published on

கன்னியாகுமரி,

கொட்டாரம் அருகே இலங்கை அகதிகள் முகாமில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

கொட்டாரம் அருகே உள்ள பெருமாள்புரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் சுரேஷ்குமார், டெம்போ டிரைவர். இவரது மனைவி நிர்மலா ராணி (வயது38). இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது. இதுவரை குழந்தைகள் இல்லை. மேலும், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று, வழக்கம் பால் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த விமலா ராணி கணவர் வெளியே சென்ற நிலையில் வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தன்மீது ஊற்றி தீ வைத்து கொண்டார். அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நிர்மலா ராணி நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கன்னியாகுமரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com