ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா

உசிலம்பட்டி அருகே ஆண்கள் மட்டும் கலந்து கொண்ட திருவிழா நடந்தது.
ஆண்கள் மட்டும் வழிபடும் திருவிழா
Published on

உசிலம்பட்டி,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது எருமார்பட்டி. இந்த ஊரிலுள்ள ஜக்கம்மா கோவில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 2-ந் தேதி நடைபெறும். இதனை தொடர்ந்து எருமார்பட்டி ஊராட்சிக்குட்பட்ட எருமார்பட்டி, ரெங்கசாமிபட்டி, அம்மமுத்தன்பட்டி, வலையபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த ஆண்கள் முத்து குடைகளுடன் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். நேர்த்திக் கடனுக்காக தேங்காய், பழம் தட்டு உடன் வெள்ளைத்துணி, பட்டாடை எடுத்து சென்று வழிபடுவது வழக்கமாக உள்ளது. இந்த வழிபாட்டில் ஆண்கள் மட்டும் கலந்து கொண்டனர். காலம், காலமாக பெண்கள் இந்த வழிபாட்டில் கலந்து கொள்வதில்லை.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com