

கிருஷ்ணகிரி:
வாகன சோதனை
கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் கே.வி.கே.சாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மாணிக்கம் மற்றும் குழுவினர் கிருஷ்ணகிரியில் சுங்கச்சாவடி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்ட வாகனங்கள், பம்பர் பொருத்தப்பட்டிருந்த வாகனங்கள், ஜி அல்லது அ என பதிவு எண் எழுதப்பட்ட வாகனங்கள் 100-க்கும் மேற்பட்டவை தணிக்கை செய்யப்பட்டன.
அபராதம்
இதில் தனியார் பஸ்கள், லாரிகள் போன்ற 27 வாகனங்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வாகன ஓட்டிகளுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. மேலும் அபராதம் விதிக்கப்பட்டு, ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் வசூலிக்கப்பட்டது.
வாகன தணிக்கை தொடர்ந்து நடத்தப்படும் என்றும், வாகன உரிமையாளர்கள் போக்குவரத்துக்கு விதிகளுக்கு உட்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும் என்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் சாமி தெரிவித்தார்.