தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து

கிணத்துக்கடவு அருகே தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து
தென்னைநார் தொழிற்சாலையில் தீ விபத்து
Published on

கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு அருகே உள்ள சென்றாம்பாளையம் செல்லும் சாலையில் ஒரு தென்னை நார் தொழிற்சாலை உள்ளது.

இந்த தொழிற்சாலையில் உள்ள தென்னை நாரில் திடீரென தீப்பிடித்தது. அத்துடன் அந்த தீ அங்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிராக்டர் மீதும் பரவியது.

இது குறித்து தகவல் அறிந்த கிணத்துக்கடவு, பொள்ளாச்சி ஆகிய பகுதிகளை சேர்ந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

4 மணி நேரம் போராடி அங்கு பிடித்த தீயை அணைத்தனர். இந்த விபத்தில் டிராக்டர், தென்னை நார் மற்றும் பல்வேறு பொருட்கள் எரிந்து நாசமானது. அதன் மதிப்பு லட்சக்கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com