ஈரோடு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு

ஈரோடு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு
Published on

ஈரோடு காவிரி ஆற்றில் ஆயிரக்கணக்கான மீன்கள் செத்து மிதந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கழிவுநீர்

ஈரேடு மாநகராட்சி பகுதியின் அனைத்து கழிவு நீரும் காவிரி ஆற்றில் கலக்கிறது. மேலும் மாநகர் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளின் கழிவு நீரும் பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடை வழியாக சென்று காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. தற்பேது மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக 750 கனஅடி தண்ணீர் மட்டுமே திறப்பதால், மிகக்குறைந்த அளவு ஓடை பேல் தண்ணீர் செல்கிறது.

இதன் காரணமாக காவிரி ஆற்றில் பெரும்பாலான பகுதிகள் பாறைகளாகவே காட்சி அளிக்கின்றன. வெண்டிபாளையம் கதவணை மின் திட்டத்துக்காக தண்ணீர் நிறுத்தப்பட்டு உள்ளதால், வைராபாளையம் பகுதியில் தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.

மீன்கள் செத்து மிதந்தன

இந்த நிலையில் நேற்று காலை சாக்கடை கழிவு நீர் காவிரி ஆற்றில் கலக்கும் வைராபாளையம் பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்தன. ஓடும் நீரில் அடித்து செல்வதுடன், கரை ஓரங்களிலும் மீன்கள் செத்து மிதந்தன.

அந்த பகுதியில் சாக்கடை கழிவு நீருடன், தொழிற்சாலை கழிவுகளும் கலப்பதாலும், பல்வேறு தெழிற்சாலைகளின் கெமிக்கல் கழிவுகளை பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் கெட்டுவதாலும், அவ்வப்பேது இதுபேன்று மீன்கள் இறந்து மிதக்கின்றன.

கோரிக்கை

வழக்கமாக, அந்த பகுதியில் மீனவர்களும், ஏழைகளும் காவிரி ஆற்றில் மீன் பிடித்து உணவுக்காக கெண்டு செல்வார்கள். நேற்று மீன்கள் செத்து மிதந்ததால் அவற்றை யாரும் எடுக்கவில்லை. இருப்பினும், சில மீனவர்கள் தண்ணீரில் துர்நாற்றம் வீசும் என்பதால், அவ்வப்பேது அவற்றை மெத்தமாக சேகரித்து கரையில் வீசியதையும் பார்க்க முடிந்தது.

காவிரி ஆற்றில் சாக்கடை கழிவு நீர், தொழிற்சாலை கழிவுநீர் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்தனர். மீன்கள் செத்து மிதந்ததை ஏராளமானோர் பார்க்க திரண்டதால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com