அருவிகளில் வெள்ளப்பெருக்கு

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அருவிகளில் வெள்ளப்பெருக்கு
Published on

கொடைக்கானல்:

கொடைக்கானல் நகரில் கடந்த சில மாதங்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக மழை குறைந்திருந்த நிலையில் இயல்பு நிலை திரும்பியது.

இதனிடையே நேற்று காலை வானில் மேக கூட்டங்கள் திரண்டன. பிற்பகல் 12 மணி முதல் சுமார் 4 மணி நேரம் நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது.

இதன் காரணமாக நகரை ஒட்டியுள்ள வெள்ளிநீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, பியர்சோலா அருவி போன்றவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த மழை காரணமாக பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் பல முறை மின்தடை ஏற்பட்டது. அதனை தொடர்ந்து மின்வாரிய ஊழியர்கள் விரைந்து சென்று மின்சார இணைப்பை சீரமைத்தனர்.

தொடர்ந்து பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சுற்றுலா பயணிகளில் சிலர் மழையில் நனைந்தபடியே சுற்றுலா இடங்களை கண்டுகளித்தனர்.

இந்த மழை காரணமாக நட்சத்திர ஏரியிலிருந்து மீண்டும் அதிக உபரி நீர் வெளியேறியது. அத்துடன் நகருக்கு குடிநீர் வழங்கும் அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com