சளி, இருமலுக்கு...

பருவ மழை காலத்தில் சளி, இருமல் பிரச்சினையை தவிர்க்க முடியாது. அவை தொண்டையையும், மார்பகத்தையும் ஆக்கிரமித்துக்கொள்ளும். மூக்கடைப்பும் ஏற்பட்டு சுவாச கோளாறு சார்ந்த பிரச்சினைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வீட்டு உபயோகப்பொருட்களை கொண்டே சளி, இருமலின் வீரியத்தை கட்டுப்படுத்தலாம்.
சளி, இருமலுக்கு...
Published on

* சளி பிரச்சினைக்கு தொண்டை வலிதான் தொடக்க அறிகுறியாக தென்படும். காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளிப்பது நல்லது. கல் உப்பை பயன்படுத்துவது நல்ல பலனை கொடுக்கும். அது தொண்டையில் ஏற்படும் கரகரப்பு தன்மையை போக்கும். தொண்டை வலியையும் குறைக்கும்.

* சளி, இருமலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகள் சில நாட்களுக்கு முன்பே எட்டிப்பார்க்கும். அப்போது முதலே வெந்நீர் பருகும் வழக்கத்தை பின்பற்ற தொடங்கிவிட வேண்டும். கொதிக்கும் நீரில் சிறிதளவு சுக்கு தூள், எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை கலந்தும் பருகலாம்.

* மார்பு சளி பிரச்சினைக்கு ஆளாகுபவர்கள் தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து சூடாக்கி மார்பில் தடவி வரலாம். ஏலக்காய், சீரகத்தை தூளாக்கி அதனுடன் நெய் கலந்தும் சாப்பிட்டு வரலாம். இதுவும் மார்பு சளியை கட்டுப்படுத்தும்.

* காலை வேளையில் சூடான நீரில் லவங்கபட்டையை பொடித்து போட்டு அதனுடன் தேன் கலந்து பருகலாம். அதுவும் தொண்டைக்கு இதளிக்கும்.

* ஏலக்காய் டீயும் பருகலாம். அதுவும் மழைக்கால நோய் தொற்றுகளில் இருந்து காக்கும். சோர்வான மனநிலையில் இருந்தும் மீள வைக்கும்.

* இஞ்சியை பொடித்து சாறு எடுத்து அதனுடன் சிறிதளவு தேன் கலந்து பருகுவதும் மார்பு சளியை கட்டுப்படுத்தும்.

* சாம்பார் வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடித்துசாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து பருகுவதும் சளி தொந்தரவுக்கு நிவாரணம் தரும்.

* குங்குமப்பூவை பாலுடன் கலந்து பருகி வருவதன் மூலம் சளி தொந்தரவுக்கு தீர்வு காணலாம்.

* மஞ்சள் தூளை பாலில் கலந்து பருகுவதும் நோய்த்தொற்றுகளில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com