இதுவரையில் இல்லாத அளவிற்கு பாதிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,835 பேர் பாதிப்பு 15 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரையில் இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 1,835 பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரையில் இல்லாத அளவிற்கு பாதிப்பு: கொரோனா தொற்றுக்கு ஒரே நாளில் 1,835 பேர் பாதிப்பு 15 பேர் பலி
Published on

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை பாதிப்பு பரவி தினந்தோறும் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த தமிழக அரசு ஊரடங்கு பிறப்பித்து நடைமுறையில் உள்ளது. இருப்பினும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் இதுவரையில் இல்லாத அளவிற்கு 1835 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இதுவரையில் மாவட்டம் முழுவதும் 80 ஆயிரத்து 850 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 71 ஆயிரத்து 383 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 8,452 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 1,015 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 15 பேர் இறந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com