மும்பை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பணிமனை அமைக்க அதிக மரங்களை வெட்டியதற்காக மும்பை மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
மும்பை மெட்ரோ ரெயில் நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம்- சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

மும்பை, 

பணிமனை அமைக்க அதிக மரங்களை வெட்டியதற்காக மும்பை மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

மரங்கள் வெட்டிய வழக்கு

மும்பையில் காடுகள் மிகுந்த பகுதியான ஆரேகாலனியில் மெட்ரோ ரெயில் பணிமனை அமைக்க கடந்த தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு முடிவு செய்தது.

இதற்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் 177 மரங்களை வெட்ட சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்தது. பொது திட்டம் நின்று விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு இந்த அனுமதியை அளித்திருந்தது. ஆனால் சுப்ரீம் கோர்ட்டு அனுமதியை மீறி கூடுதல் மரங்களை வெட்டியது தெரியவந்தது.

ரூ.10 லட்சம் அபராதம்

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தானாக முன்வந்து வழக்கை விசாரித்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் நரசிம்மா, பார்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து வந்தது. இதில் சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை மீறி கூடுதல் மரங்களை வெட்டியதற்காக மும்பை மெட்ரோ ரெயில் கழக நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்தும், அதனை 2 வாரங்களுக்குள் சம்பந்தப்பட்ட வனக்காப்பாளருக்கு செலுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com