மும்பை குடிசைவாசிகளுக்கு சொந்த வீடு ராகுல் காந்தி உறுதி

மும்பையில் உள்ள 6 தொகுதிகள் உள்பட மொத்தம் 17 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மும்பை குடிசைவாசிகளுக்கு சொந்த வீடு ராகுல் காந்தி உறுதி
Published on

மும்பை,

இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

மும்பையில் உள்ள குடிசைப்பகுதி மக்கள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு குறைந்தப்பட்சம் 500 சதுர அடியில் வீடு வழங்க கட்சியினர் கோரிக்கை வைத்தனர். இதற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வர வாக்களித்தால் குடிசைவாசிகள் மற்றும் வாடகை வீட்டில் வசிப்பவர்களுக்கு சொந்த வீடு கிடைக்கும் என நான் உறுதியளிக்கிறேன். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com