மைசூருவில் மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி

மைசூருவில் நேற்று மாணவ- மாணவிகளுக்கான மைசூருவில் நேற்று மாணவ- மாணவிகளுக்கான யோகா போட்டி, தசரா கண்காட்சி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தசரா கண்காட்சி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
மைசூருவில் மாணவர்களுக்கான மாநில அளவிலான யோகா போட்டி
Published on

மைசூரு:

மைசூருவில் நேற்று மாணவ- மாணவிகளுக்கான யோகா போட்டி, தசரா கண்காட்சி வளாகத்தில் நடந்தது. இந்த போட்டியை ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ.கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். பின்னர் சிறந்த யோகா பயிற்சி செய்த மாணவர்களுக்கு ஸ்ரீவத்ஷா எம்.எல்.ஏ. பரிசுகள் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், மைசூரு தசரா விழா இந்த ஆண்டு சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. தசரா கண்காட்சி வளாகத்தில் உள்ள மண்டபத்தில் மாநில அளவிலான மாணவர்களுக்கான யோகா போட்டியை மாநில அரசு ஏற்படுத்தி உள்ளது. இந்த நிகழ்ச்சியும் எந்தவித பாரபட்சமின்றி நடந்தது. தசரா விழாவில் எல்லா நிகழ்ச்சிகளையும் மாநில அரசு நன்றாக நடத்தி வருகிறது. கலை, கலாசாரத்தை ஆரோக்கியத்திற்காக வைத்து கொள்ள யோகாசனம் முக்கியமானது. அது தான் இந்த தசரா விழாவில் நடந்து வருகிறது.இந்த நிகழ்ச்சி மிகவும் முக்கியமானது மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இருந்து மாணவ- மாணவிகள் வந்து யோகா போட்டியில் கலந்து உள்ளனர். யோகா போட்டியை சிறப்பாக நடத்தி முடித்த அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன். கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி யோகா தினத்தை முன்னிட்டு மைசூருவில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த ஆண்டு சீனா நாட்டில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் விளையாட்டு போட்டியின் போது பிரதமர் மோடி யோகா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.-----------------------------------

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com