தசரா யானைகளுக்கு, பீரங்கி வெடிகுண்டு சத்த பயிற்சி வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது

மைசூரு தசரா யானைகளுக்கு, பீரங்கி வெடிகுண்டு சத்த பயிற்சி வருகிற 8-ந்தேதி முதல் தொடங்குகிறது.
தசரா யானைகளுக்கு, பீரங்கி வெடிகுண்டு சத்த பயிற்சி வருகிற 8-ந்தேதி தொடங்குகிறது
Published on

மைசூரு:

மைசூரு தசரா

உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா, வருகிற 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

இதையொட்டி மைசூருவில் தசரா விழாவுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. அந்த வகையில் தசரா விழாவில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 9 யானைகளுக்கு நடைபயிற்சி. பாரம் சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மைசூரு நகரில் மின்விளக்கு அலங்கார பணிகள், அரண்மனையை புதுப்பித்து வர்ணம் பூசும் பணிகள் தொடங்கியுள்ளது. இந்த பணிகளில் ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

பீரங்கி வெடிசத்த பயிற்சி

இந்த நிலையில் தசரா விழாவில் பங்கேற்க 2-ம் கட்டமாக மேலும் 6 யானைகள் வருகிற 7-ந்தேதி அரண்மனைக்கு வருகின்றன.மேலும் வருகிற 8-ந்தேதி யானைகளுக்கு அரண்மனை பின்புறத்தில் உள்ள வளாகத்தில் பீரங்கி வெடிசத்த பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இந்த பயிற்சி வாரத்தில் 2 நாட்கள் நடக்கும். மேலும் 5-ந்தேதி அபிமன்யு, தனஞ்செயா, கோபாலசாமி யானைகளுக்கு மரத்தால் செய்திருக்கும் அம்பாரி மாதிரி சுமத்தி நடைபயிற்சி அளிக்கப்பட உள்ளது. தசரா விழா தொடங்குவதற்கு முன் அதாவது வருகிற 26-ந்தேதிக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும் என்று மைசூரு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கண்ட தகவலை மைசூரு தசரா கமிட்டி குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com