கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நடுக்கடலில் சிக்னல் வெடியை வெடித்து நன்றி தெரிவித்த கடலோர காவல் படையினர்

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கடலோர காவல்படையினர் நடுக்கடலில் சிக்னல் வெடிகளை வெடித்து நன்றி தெரிவித்தனர். மேலும், கப்பல்கள் மின்விளக்குகளால் ஜொலித்தன.
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு நடுக்கடலில் சிக்னல் வெடியை வெடித்து நன்றி தெரிவித்த கடலோர காவல் படையினர்
Published on

தூத்துக்குடி,

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உள்ள டாக்டர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், போலீசாருக்கு நன்றி செலுத்தும் வகையில் பாதுகாப்பு துறை சார்பில், கொரோனா நோயாளிகள் சிகிச்சைபெறும் ஆஸ்பத்திரிகளின் மீது நேற்று மலர் தூவப்பட்டது.

அதேபோன்று தூத்துக்குடியிலும் கடலோர காவல்படை சார்பில் நன்றி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

மின்விளக்குகளால் ஜொலித்தன

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் நடுக்கடலில் கடலோர காவல்படைக்கு சொந்தமான ஆதேஷ், அபிராஜ் ஆகிய 2 ரோந்து கப்பல்கள் நிறுத்தி வைக்கப்பட்டன. அந்த கப்பல்கள் மின்விளக்குகளால் ஜொலித்தன.

தொடர்ந்து ஆபத்து காலத்தில் ஒளிரச்செய்யக்கூடிய சிக்னல் லைட்டிங் வெடிகளை கடலோர காவல்படையினர் வெடிக்க செய்தனர். இதனால் நடுக்கடலில் வாணவேடிக்கை போன்று காட்சி அளித்தது.

இது கரையில் இருந்து பார்த்தவர்களுக்கு கண்கொள்ளா காட்சியாக அமைந்தது. கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்களும் அதை பார்த்து ரசித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com