உளுந்தூர்பேட்டை அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை; 2 பேர் மீது வழக்கு

உளுந்தூர்பேட்டை அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை செய்த 2 போ மீது போலீசா வழக்குப்பதிவு செய்தனா.
உளுந்தூர்பேட்டை அருகே போலி ஆவணம் தயாரித்து நிலம் விற்பனை; 2 பேர் மீது வழக்கு
Published on

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குட்பட்ட உளுந்து ஆண்டவர் கோவில் பகுதியை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் உளுந்தூர்பேட்டை பகுதியை சேர்ந்த சின்னப்பன் மகன் சுப்பிரமணியன் என்பவருக்கும் இடையே நிலம் தொடர்பான பிரச்சினையில் உளுந்தூர்பேட்டை கோர்ட்டில் வழக்கு ஒன்று நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பிரச்சினைக்குரிய நிலத்திற்கு சுப்பிரமணியன் போலியான ஆவணம்தயார் செய்து திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு விற்றதாக தெரிகிறது.

இதுகுறித்து கேசவன் எலவனாசூர்கோட்டை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சுப்பிரமணியன், பிரகாஷ் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com