அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச அரிசி

முத்தியால்பேட்டையில் அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச அரிசியை பிரகாஷ் குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்.
அரசுப்பள்ளி மாணவிகளுக்கு இலவச அரிசி
Published on

முத்தியால்பேட்டை

கீழ் பள்ளியில் படிக்கும் 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக முத்தியால்பேட்டை சின்னாத்தா அரசு மேல்நிலைப்பள்ளியில் 160 மாணவிகளுக்கு இலவச அரிசியை தொகுதி எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் வழங்கினார். மேலும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மதிய உணவை ருசித்து பார்த்து, அதன் தரம் குறித்து ஆய்வு செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் சாய் வர்கிஸ் மற்றும் ஆசிரியர்கள், எம்.எல்.ஏ. ஆதரவாளர்கள் கலந்துகொண்டனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com