புனேவில் இருந்து 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
புனேவில் இருந்து 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்தன
Published on

ஆலந்தூர்,

தமிழகத்துக்கு இதுவரை மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் 1 கோடியே 3 லட்சம் தடுப்பூசிகள் வந்து உள்ளன.இந்த நிலையில் தமிழகத்தில் தடுப்பூசி சுத்தமாக கையிருப்பு இல்லை என்பதால் உடனடியாக அனுப்பி வைக்கும்படி மத்திய அரசுக்கு தமிழக சுகாதாரத் துறை செயலாளர், அவசர செய்தி அனுப்பினார்.இதையடுத்து நேற்று முன்தினம் மத்திய தொகுப்பில் இருந்தும், தமிழக அரசின் நேரடி கொள்முதல் மூலமாகவும் புனே மற்றும் ஐதராபாத்தில் இருந்து 99 ஆயிரத்து 420 கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இந்த நிலையில் நேற்று மாலை புனேவில் இருந்து 31 பெட்டிகளில் 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன. இவை தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

பின்னர் அவை, விமான நிலையத்தில் இருந்து தேனாம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவ கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழகத்துக்கு வந்த தடுப்பூசிகள், பல்வேறு பகுதிகளுக்கு பிரித்து அனுப்பப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com