ஜாலியான பயணத்துக்கு உதவும் கேட்ஜெட்கள்

பயணத்தின்போது தேவையற்ற சத்தங்கள், அசவுகரியங்களால் தூங்குவதில் சிரமம் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க உதவும் கருவிதான் ‘யோகா ஸ்லீப் மெஷின்’. இந்தக் கருவியில் இருந்து இனிமையான ஒலி வெளிப்படும். இது வெளிப் பகுதியில் இருந்து வரக்கூடிய குறட்டை உட்பட பல தேவையற்ற சத்தங்களைத் தடுக்கும்.
ஜாலியான பயணத்துக்கு உதவும் கேட்ஜெட்கள்
Published on

ல்வேறு காரணங்களுக்காக நீங்கள் மேற்கொள்ளும் பயணங்கள் சுவாரசியமாகவும், மகிழ்ச்சியாகவும் அமைவதற்கு சில விஷயங்களை முன்பே திட்டமிட வேண்டும். நீங்கள் கொண்டு செல்லும் உடமைகளின் பாதுகாப்பு, பயணத்தின்போது உங்கள் தனிப்பட்ட வசதி, பிறருடன் தொடர்புகொள்ளுவது போன்றவற்றை சரியாக அமைத்துக் கொண்டால் பயணம் இனியதாக இருக்கும். அதற்கு உதவும் சில தொழில்நுட்ப கருவிகள் பற்றிய தொகுப்பு இதோ…

யோகா ஸ்லீப் மெஷின்:

பயணத்தின்போது தேவையற்ற சத்தங்கள், அசவுகரியங்களால் தூங்குவதில் சிரமம் ஏற்படக்கூடும். இதை தவிர்க்க உதவும் கருவிதான் 'யோகா ஸ்லீப் மெஷின்'. இந்தக் கருவியில் இருந்து இனிமையான ஒலி வெளிப்படும். இது வெளிப் பகுதியில் இருந்து வரக்கூடிய குறட்டை உட்பட பல தேவையற்ற சத்தங்களைத் தடுக்கும். நமக்கு பிடித்த ஒலிகளையும் இந்தக் கருவியில் பதிவு செய்து ஒலிக்கச் செய்யலாம். கைக்குள் அடங்கிவிடும் இந்தக் கருவியை வெளியூர்களுக்குச் செல்லும்போது, கைப்பையில் வைத்து எளிதாக எடுத்துச்செல்ல முடியும்.

டிராவல் அடாப்டர்:

பயணம் செல்லும் இடங்களில் ஸ்மார்ட்போன், லேப்டாப், கேமரா போன்ற மின்னணு கருவிகளை ஒரே நேரத்தில் சார்ஜ் செய்வது கடினமான விஷயம். இதுபோன்ற சமயங்களில், கைக்கொடுக்கும் கருவிதான் 'டிராவல் அடாப்டர்'. வெளிநாடு மற்றும் உள்நாட்டில் எங்கு பயணம் செய்தாலும் இதை எளிதாக உடன் கொண்டு செல்லலாம். எந்த வகையான பிளக் பாயிண்ட்டிலும் பொருத்தி பயன்படுத்தலாம். லேப்டாப், ஸ்மார்ட் வாட்ச், செல்போன் என எந்த கருவியையும் 'டிராவல் அடாப்டர்' மூலம் சார்ஜ் செய்யலாம். இதில் 2 யு.எஸ்.பி. போர்ட்டுகள் இருக்கும்.

ஏர் டேக்:

பயணத்தின்போது சில நேரங்களில் உங்கள் உடமைகளை நீங்கள் தொலைக்க நேரிடலாம். அத்தகைய சமயங்களில் இந்த 'ஏர் டேக்' உங்களுக்கு உதவும். இதில் உள்ள டிராக்கிங் தொழில்நுட்பத்தை உங்கள் ஸ்மார்ட் போனுடன் எளிதாக இணைக்க முடியும். இந்த சிறிய வகை ஏர் டேக்கை உங்கள் சூட்கேஸ் அல்லது டிராவல் பேக்கில் போட்டு வைக்கலாம். ஏதாவது ஒரு சூழ்நிலையில் உங்கள் லக்கேஜ் காணாமல் போனால், அதில் இருக்கும் ஏர் டேக்கை கொண்டு உங்கள் ஸ்மார்ட் போன் மூலம் எளிதாக அது இருக்கும் இடத்தை அறிய முடியும்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com