விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; நீர்நிலைகளில் 66,785 சிலைகள் கரைப்பு - மாநகராட்சி தகவல்

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நேற்று காலை வரையில் நீர்நிலைகளில் 66,785 சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.
விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம்; நீர்நிலைகளில் 66,785 சிலைகள் கரைப்பு - மாநகராட்சி தகவல்
Published on

மும்பை, 

மும்பையில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது நேற்று காலை வரையில் நீர்நிலைகளில் 66,785 சிலைகள் கரைக்கப்பட்டதாக மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

191 செயற்கை குளம்

மும்பையில் கடந்த 19-ந்தேதியில் இருந்து விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் கோலாகலமாக நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் பொதுமக்கள் வீடுகள், மண்டல்களில் பிரதிஷ்டை செய்த சிலைகளை 1 நாளுக்கு பிறகு நீர்நிலைகளில் கரைத்தனர். முதற்கட்டமாக மும்பை முழுவதும் அமைக்கப்பட்ட 191 செயற்கை குளங்கள், கடற்கரைகளில் நேற்று காலை வரையில் 66,785 சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் 17 ஆயிரத்து 175 சிலைகள் செயற்கை குளங்களில் கரைக்கப்பட்டது ஆகும். கடந்த ஆண்டு 60 ஆயிரம் சிலைகள் கரைக்கப்பட்டு இருந்தது.

வாட்ஸ்அப் நம்பர்

பக்தர்கள் சிலைகள் கரைக்க ஏதுவாக 8999228999 என்ற வாட்ஸ்அப் நம்பரை மாநகராட்சி அறிமுகம் செய்து உள்ளது. இந்த நம்பரில் தொடர்பு கொண்டு சிலை கரைப்பு தொடர்பாக அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் கடற்கரைகளில் ஜெல்லி மீன்கள் தாக்கும் அபாயம் இருப்பதாகவும் பக்தர்கள் உஷாராக இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளது.. இதேபோல தானேயில் வீடுகள் மற்றும் மண்டல்களில் வைக்கப்பட்டு இருந்த 7 ஆயிரத்து 989 சிலைகள் கரைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com