மூப்பனார் சிலைக்கு மாலை

புதுவை அரசு சார்பில் மூப்பனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மூப்பனார் சிலைக்கு மாலை
Published on

புதுச்சேரி

மூப்பனாரின் பிறந்தநாள் விழா புதுவை அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி மரப்பாலம் சந்திப்பில் உள்ள அவரது சிலை அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.

சிலைக்கு அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்.சரவணன் குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் ராஜவேலு, எம்.எல்.ஏ.க்கள் பாஸ்கர், லட்சுமிகாந்தன், கே.எஸ்.பி.ரமேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com