

புதுச்சேரி
புதுவை லாஸ்பேட்டை நரிக்குறவர் குடியிருப்பை சேர்ந்தவர் பாபு. இவரது மனைவி ரேகா. இவர்களது மகள் ரித்திகா என்ற கிருத்திகா (வயது 10). அதே பகுதியை சேர்ந்த ஒருவர், தங்கள் வீட்டிற்கு வந்த கிருத்திகா பணத்தை திருடிவிட்டதாக கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து தாய் ரேகா கிருத்திகாவை கண்டித்துள்ளார்.
இதனால் வேதனையடைந்த கிருத்திகா வீட்டின் அருகில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இதுகுறித்து லாஸ்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.