செல்போன் விளையாட்டை பெற்றோர் கண்டித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை

மாகிமில் 4 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் அவள் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.
செல்போன் விளையாட்டை பெற்றோர் கண்டித்ததால் 4-வது மாடியில் இருந்து குதித்து சிறுமி தற்கொலை
Published on

மும்பை, 

மாகிமில் 4 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து 13 வயது சிறுமி தற்கொலை செய்து கொண்டாள். செல்போனில் விளையாடியதை கண்டித்ததால் அவள் இந்த விபரீத முடிவை எடுத்தது தெரியவந்தது.

பெற்றோர் கண்டிப்பு

மும்பை மாகிம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில் 13 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வந்தாள். இவளது தந்தை கட்டுமான அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். தாய் வீட்டு வேலை செய்து வருகிறார். 9-ம் வகுப்பு பயின்று வந்த சிறுமி வீட்டில் அதிக நேரம் தனிமையில் இருந்ததால் செல்போனில் அடிக்கடி விளையாடி வந்தாள். ஒரு கட்டத்தில் சிறுமியின் விளையாட்டு எல்லை மீறி போவதை கண்ட பெற்றோர் மகளை கண்டித்து உள்ளனர். மேலும் கடந்த 21-ந் தேதி காலை சிறுமியின் பெற்றோர் செல்போனை அவளிடம் கொடுக்காமல் எடுத்து கொண்டு சென்று விட்டதாக தெரிகிறது.

சிறுமி தற்கொலை

இதனால் மனஉளைச்சல் அடைந்த சிறுமி காலை 7.30 மணி அளவில் அருகில் உள்ள 4 மாடி கட்டிடத்தின் மொட்டை மாடிக்கு சென்றாள். திடீரென அங்கிருந்து கீழே குதித்து விட்டாள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கட்டிடத்தின் காவலாளி மற்றும் அப்பகுதியினர் ரத்த வெள்ளத்தில் கிடந்த சிறுமியை மீட்டு சயான் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு நடத்திய பரிசோதனையில் சிறுமி ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது. இது குறித்து மாகிம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com