நவிமும்பையில் டாக்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது

நவிமும்பையில் டாக்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிரைவர் கைது செய்யப்பட்டார்
நவிமும்பையில் டாக்சியில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை; டிரைவர் கைது
Published on

நவிமும்பை, 

நவிமும்பையை சேர்ந்தவர் சந்திப் சோனாவானே(வயது39). டாக்சி டிரைவரான இவர், சம்பவத்தன்று அங்குள்ள போன்கோடே பகுதியில் சவாரிக்கு சென்றிருந்தார். அப்போது, அப்பகுதியை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய 2 சிறுமிகள் சந்திப் சோனாவானே டாக்சியில் ஏறினர். சிறுமிகள் தனியாக வந்து இருப்பதை அறிந்த டிரைவர் சந்திப் சோனாவானே சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்தார். இதனால் பயந்துபோன சிறுமிகள் உதவி கேட்டு சத்தம்போட்டனர். சத்தம்கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் சிறுமிகளை மீட்டு தப்பி செல்ல முயன்ற டிரைவர் சந்திப் சோனாவானேவையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவரை ஏ.பி.எம்.சி. போலீசில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்திப் சோனாவானேவை கைது செய்தனர். மேலும் இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com