கூகுள் பிக்ஸெல் 7 ஏ

கூகுள் பிக்ஸெல் 7 ஏ
Published on

கூகுள் நிறுவனம் தற்போது புதிய மாடலாக பிக்ஸெல் 7 ஏ மாடல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது 6.1 அங்குல ஓலெட் திரையைக் கொண்டது. இதில் கூகுள் டென்சோர் ஜி 2 பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டதாக வந்துள்ளது.

இரண்டு சிம் கார்டு போடும் வசதி கொண்டது. பின்புறம் 64 மெகா பிக்ஸெல் கேமராவும், முன்புறம் 13 மெகா பிக்ஸெல் கேமராவும் உள்ளது. திரையிலேயே விரல் ரேகை உணர் சென்சார் உள்ளது. இதன் எடை 193 கிராம் ஆகும். இது 4,385 எம்.ஏ.ஹெச். திறன்கொண்ட பேட்டரி 18 வாட் சார்ஜருடன் வந்துள்ளது. இதன் விலை சுமார் ரூ.43,999.

X

Daily Thanthi
www.dailythanthi.com