போலீஸ் வாகனம் மீது அரசு பஸ் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்

பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போலீஸ் வாகனம் மீது அரசு பஸ் மோதியது.
போலீஸ் வாகனம் மீது அரசு பஸ் மோதல்; சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேர் காயம்
Published on

சென்னை நெற்குன்றம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் கோயம்பேடு போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது கோயம்பேட்டில் இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பஸ், அங்கு நிறுத்தி இருந்த போலீஸ் வாகனம் மீது மோதியது. இதில் போலீஸ் வாகனத்தின் முன்பகுதி முழுவதும் சேதமடைந்தது.

அப்போது அங்கு பணியில் இருந்த போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன் (வயது 56), போக்குவரத்து போலீஸ்காரர் தண்டபாணி (38) ஆகிய இருவரும் காயமடைந்தனர். இருவரும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் ஜெயக்குமார் (51) என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com