

திண்டிவனம்,
சென்னையிலிருந்து திருச்சிக்கு 2 அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தன. நேற்று இரவு திண்டிவனம் அருகே உள்ள சாரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது சாலையின் குறுக்கே இருந்த பேரிகார்டுமீது மோதாமல் இருப்பதற்காக முன்னல் சென்ற பஸ்டிரைவர் திடீரென பிரேக் பிடித்தார். இதனால் பின்னால் வேகமாக வந்த அரசு பஸ் டிரைவர் பிரேக் பிடித்தும் நிற்காமல் முன்னால் சென்ற அரசு பஸ் மீது மோதியது. இதில் முன்னால் சென்ற பஸ்சின் பின்பக்க கண்ணாடியும், பின்னால் வந்த பஸ்சின் முன்பக்க கண்ணாடியும் உடைந்து சேதம் அடைந்தது. ஆனால் பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் இல்லை. இந்த விபத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து வந்த ஒலக்கூர் போலீசார் விபத்துக்குள்ளான 2 அரசு பஸ்களையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். விபத்தினால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. 2 அரசு பஸ்களும் ஒரே பணிமனையை சேர்ந்தது என்பதால் இரு பஸ்களையும் டிரைவர்கள் அங்கிருந்து ஓட்டிச்சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.