வாகனம் மோதி மூதாட்டி பலி

பெண்ணாடம் அருகே வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
வாகனம் மோதி மூதாட்டி பலி
Published on

பெண்ணாடம்,

கருவேப்பிலங்குறிச்சி அடுத்த வேட்டக்குடி கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள். இவருடைய மனைவி கருப்பாயி (வயது 73). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண்ணாடம் அருகே முருகன்குடியில் உள்ள தனது தங்கை தனலட்சுமி வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் நேற்று காலை முருகன்குடி பஸ் நிறுத்தம் அருகே விருத்தாசலம்-திட்டக்குடி நெடுஞ்சாலையோரம் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கருப்பாயி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த கருப்பாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருப்பாயி மகன் வெங்கடேசன் அளித்த புகாரின்பேரில் பெண்ணாடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com