கிணற்றில் மூதாட்டி பிணம்

கிணற்றில் மூதாட்டி பிணம்

ஆற்காடு அருகே கிணற்றில் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
Published on

ஆற்காடு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே பெரியார் நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி கிணற்றில் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் ஆற்காடு தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் இருந்த மூதாட்டி பிணத்தை மீட்டனர். மேலும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com