புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை

திருமணத்திற்காக அதிக கடன் வாங்கியதால், புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
புதுமாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை
Published on

காரைக்கால்

திருமணத்திற்காக அதிக கடன் வாங்கியதால், புதுமாப்பிள்ளை தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அடுத்த மாதம் திருமணம்

காரைக்கால் காமராஜர் சாலையை சேர்ந்தவர் சிங்காரம். இவரது மனைவி கலையரசி. மகன் கார்த்திகேசன் (வயது28). இவர் தனியார் வங்கி ஒன்றில் வேலை செய்து வந்தார். அவருக்கு வருகிற செம்ப்டம்பர் மாதம் 11-ந் தேதி திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகளை பெற்றோர் செய்து வந்தனர்.

திருமணத்தை சிறப்பாக நடத்த எண்ணிய தாயார் கலையரசி, வெளியில் அதிகமாக கடன் வாங்கிவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து, காத்திகேசன் தனது தாயிடம் அதிகம் கடன் வாங்கவேண்டாம் என கூறியதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால், மிகுந்த மனவேதனையில் இருந்த கார்த்திகேசன், இன்று காலை வீட்டு அறையில், புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இது குறித்து காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com