நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது

நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது செய்யப்பட்டார்.
நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது
Published on

மும்பை,

நாசிக்கில் லஞ்ச வழக்கில் ஜி.எஸ்.டி. அதிகாரி கைது செய்யப்பட்டார்.

ஜி.எஸ்.டி. அதிகாரி லஞ்சம்

நாசிக் மண்டல ஜி.எஸ்.டி. அலுவலகத்தில் சீனியர் சூப்பிரண்டாக பணியாற்றி வருபவர் சந்திரகாந்த் சவான்கே. இவர் ஜி.எஸ்.டி. சலுகை கேட்டு விண்ணப்பித்தவரிடம் இருந்து ரூ.8 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக புகார் வந்தது. இதுகுறித்து சி.பி.ஐ.யிடம் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவத்தன்று ஜி.எஸ்.டி. அலுவலகம் சென்ற சி.பி.ஐ. அதிகாரிகள், லஞ்சம் வாங்கிய போது அதிகாரி சந்திரகாந்த் சவான்கேயை கையும், களவுமாக பிடித்தனர்.

ரூ.2.37 லட்சம் பறிமுதல்

மேலும் அதிகாரிகளின் அலுவலகத்தில் இருந்த ரூ.37 ஆயிரம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சி.பி.ஐ. அதிகாரிகள் ஜி.எஸ்.டி. அதிகாரி சந்திரகாந்த் சவான்கேயை கைது செய்தனர்.

மேலும் அவரின் வீட்டில் சோதனை நடத்தி ரூ.2 லட்சம் மற்றும் சில ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com