குடியாத்தம், தீக்குளித்து வாலிபர் தற்கொலை

குடியாத்தம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
குடியாத்தம், தீக்குளித்து வாலிபர் தற்கொலை
Published on

குடியாத்தம்

குடியாத்தம் அருகே வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கள்ளூர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் நசீர், இவரது மகன் நியாஸ்அகமது (வயது 24), கோழிக்கறி கடையில் வேலை செய்து வந்தார். உடல்நிலை சரியில்லாததால் நியாஸ் அகமது தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 28-ந் தேதி வீட்டில் நியாஸ் அகமது தன் மீது மண்எண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர், பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று நியாஸ்அகமது பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர் ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com