குமாரசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் ஜனதாதளம்(எஸ்) நன்றாக இருக்கும்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. தாக்கு

குமாரசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் ஜனதாதளம்(எஸ்) கட்சி நன்றாக இருக்கும் என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கடுமையாக தாக்கி பேசினார்.
குமாரசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் ஜனதாதளம்(எஸ்) நன்றாக இருக்கும்; எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. தாக்கு
Published on

மைசூரு:

குமாரசாமியை கட்சியில் இருந்து நீக்கினால் ஜனதாதளம்(எஸ்) கட்சி நன்றாக இருக்கும் என்று எச்.விஸ்வநாத் எம்.எல்.சி. கடுமையாக தாக்கி பேசினார்.

சுயநலத்தால்...

பா.ஜனதா அதிருப்தி எம்.எல்.சி. எச்.விசுவநாத் நேற்று மைசூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜனதாதளம்(எஸ்) கட்சி பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்காது என்று அதன் மாநில தலைவர் சி.எம்.இப்ராகிம் தெரிவித்துள்ளார். இது சரி தான். ஜனதாதளம்(எஸ்) கட்சியின் கொள்கை வேறு, பா.ஜனதாவின் கொள்கை வேறு. குமாரசாமி மட்டுமே ஜனதாதளம்(எஸ்) கட்சி கிடையாது. ஜனதாதளம்(எஸ்) கட்சிக்காக உழைத்த தொண்டர்கள் பலர் உள்ளனர். ஒரு சிலரின் சுயநலத்தால் தொண்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குமாரசாமியை நீக்க வேண்டும்

குமாரசாமி தன்னுடைய சுயநலத்துக்காக பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்துள்ளார். அவரது முடிவை கட்சியில் இருப்பவர்களே விரும்பவில்லை. தொண்டர்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் ஜனதாதளம்(எஸ்) கட்சியை அடமானம் வைக்க குமாரசாமி முடிவு செய்துவிட்டார். குமாரசாமியை கட்சியில் இருந்து விலக்கி வைக்க கூடாது, அவரை கட்சியில் இருந்து நீக்கினால், ஜனதாதளம்(எஸ்) கட்சி நன்றாக இருக்கும். கட்சி வளர்ச்சி அடையும். குமாரசாமி ஜனதாதளம் (எஸ்) கட்சியை வளர்க்கவில்லை. அவருக்கு மட்டும் கட்சி சொந்தம் கிடையாது. அவருக்கு முன்பே இப்ராகிம், தேவேகவுடா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கட்சியை வளர்த்தனர். இடையில் வந்தவர் தான் குமாரசாமி. கூட்டணி குறித்து கட்சியிடம் கருத்து கேட்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்துள்ளார். அவரை முதலில் சி.எம்.இப்ராகிம் கட்சியில் இருந்து நீக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எச்.விஸ்வநாத் முன்பு ஜனதாதளம்(எஸ்) கட்சியின் மாநில தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com