குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
குடும்பத்தகராறில் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கிருஷ்ணராயபுரம்,

குடும்பத்தகராறு

கிருஷ்ணராயபுரம் அருகே கம்மநல்லூர் ஊராட்சி பொய்கை புத்தூரை சேர்ந்தவர் சிவசங்கரன். இவரது மனைவி கலையரசி (வயது 28). இவர்களுக்கு மவுனிகா ஸ்ரீ (2) என்ற பெண் குழந்தை உள்ளது. சிவசங்கரன் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே நேற்று முன்தினம் குடும்பத்தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில், மனமுடைந்த கலையரசி தனது வீட்டில் தூக்குப்போட்டுக்கொண்டார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் வீட்டின் பூட்டை உடைத்து கலையரசியை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் கலையரசி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கலையரசியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கலையரசிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் குளித்தலை ஆர்.டி.ஓ. புஷ்பாதேவி விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com