திருமணமாகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருமணமாகாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணமாகாத ஏக்கத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

கரூர்,

கரூர் அருகே உள்ள வாங்கல் பசுபதி பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 33). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்து வந்த கிருஷ்ணன் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாங்கல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தூர்பாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காந்தி கிராமத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com